தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இலங்கை

இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் தென்னாபிரிக்க அணி, 6 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 39.2 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணி வீரரான இசுறு உதான 7 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 57 பந்துகளில் 78 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.

இதையடுத்து, 190 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய தென்னாபிரிக்க அணி, 32.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி வாகை சூடியது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment