பாகிஸ்தான் வசமிருந்த இந்திய விமானி அபிநந்தன் லாகூரை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சற்று நேரத்தில் வாகா எல்லையில் வைத்து அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளார். அவரை வரவேற்க ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில் அபிநந்தன் இன்று பிற்பகல் விடுவிக்கபடுவாரென பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.
அமிர்தசரஸ் துணை ஆணையாளர் சிவ் துலர் சிங் தில்லான், இந்திய விமானப்படை மூத்த குழுவினரிடம் விங் கமாண்டர் அபிநந்தனை ஒப்படைப்பார்கள் என்று கூறியுள்ளார்.
அபிநந்தனை வரவேற்க இந்திய மக்கள் அங்கு குவிந்து உள்ளனர். எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் பாடல்களை படித்தபடி உள்ளனர். மேளங்களை இசைத்தபடியும் மற்றும் மூவர்ண கொடிகளை கைகளில் ஏந்தியபடியும் உள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் மக்கள் நாட்டுப்பற்று பாடல்களுடன், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.
பஞ்சாப் பொலிஸ் அதிகாரிகள் அதிக அளவில் இப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அபிநந்தன் லாகூர் வந்தடைந்து உள்ளார். சற்று நேரத்தில் வாகா எல்லை வந்தடைகிறார்.
0 comments:
Post a Comment