சட்டவிரோத போதை பொருள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் வைத்து நேற்று மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 78 லட்சம் ரூபாய் பெறுமதியான ஹஷீஸ் எனும் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த போதை பொருள் இத்தாலியிருந்து விமான அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மினுவங்கொடை, ஹொரண, முணமல்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment