இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக அணித் தலைவர் விராட் கோஹ்லி 116 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இதன்மூலம் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோஹ்லி தனது 40 ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து, 40 சதங்கள் பூர்த்தி செய்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்தார்.
பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சார்பாக பெட் கம்மின்ஸ் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2:0 பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
0 comments:
Post a Comment