இலங்கையில் கொடூர யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்பதை மீள வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறு தமிழகத்தின் அ.தி.மு.க. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்திருக்கின்றது.
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் நம்பகத்தன்மை மிக்க சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு அழுத்தம் கொடுக்குமாறு நாம் இந்தியாவையும் ஐ.நாவையும் வலியுறுத்திக் கோருகின்றோம் என்றும் அ.தி.மு.க. தனது தேர்தல் விஞ்ஞாபன இணைப்பில் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment