பிலியந்தல - கொட்டாவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூவர் மருத்துமவமனையில் சேர்க்கப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் கலுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிரிஸ்வத்தையில் இருந்து கொட்டாவை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சிற்றூந்து கெஸ்பேவயிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த சிற்றூந்துடன் மோதியதில் விபத்து நேர்ந்ததாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
0 comments:
Post a Comment