கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் நபரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (வயது 32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வேப்பங்குளத்தை சேர்ந்த இவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இன்று காலை தனது அலுவலகப் பணிப்பாளருடன் அலுவலகத்துக்குப் புறப்படும்போதே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சரமாரியாக வெட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தலை, கை, கால் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுக்குள்ளான அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமுன் உயிரிழந்துள்ளார்.
உறவினர் ஒருவரே வெட்டியதாகவும் வெட்டிய நபர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment