பொறுப்புக் கூறலில் இலங்கை பொறுப்பற்ற விதமாகத்தான் இன்னமும் செயல்படுகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது ஐநாவில் நேற்று நடந்த விடயங்கள். இதன் ஒரு கட்டம்தான் ஐநாவின் அறிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டமை.
சர்வதேசங்கள் தமது அழுத்தத்தை மேலும் பிரயோகித்து இலங்கையின் பொறுப்புக்கூறலில் காணப்படும் மந்தகதியை இல்லாமலாக்க வேண்டும் என்பதே தமிழ் தரப்புக்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 40 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கை ஐநா ஆணையாளரால் சமர்பிக்கப்பட்டது. ஐநாவின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை, நல்லிணக்கப் பொறிமுறை தாமதிக்கப்படுகின்றமை, நிலைமாறுகால நீதி பொறிமுறையை செயற்படுத்தாமை போன்ற விடயங்களை ஐநா ஆணையாளர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை சார்பில் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன. அறிக்கையில் உள்ள பெரும்பாலான விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாதெனக் கூறியுள்ளார்.
#UNHRC #HumanRightsCouncil #SrilankaWarCrimes #HumanRights #TamilPeople #WarCrimes #SrilankaGovernment #TilakMarapana #HumanRightsCommissioner #UNReport #TamilNewsKing
0 comments:
Post a Comment