ராகுல் காந்தியை அரை லிட்டர் விஷம் அருந்தச் செய்ய வேண்டும். அதில் அவர் உயிரோடு இருந்தால், ராகுல் காந்தி உண்மையிலேயே சிவனின் அவதாரம் தான் என நாங்கள் நம்புகிறோம்’ என தெரிவித்தார்.
இவ்வாறு குஜராத் மாநில பா.ஜ.க அமைச்சர் கன்பத் வசவா தெரிவித்துள்ளார்.
சூரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு சர்ச்சையும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து கூறிய கருத்து காங்கிரசாருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
ராகுல் காந்தியை சிவனின் அவதாரம் என்று காங்கிரசார் சிலர் அழைத்து வரும் நிலையிலையே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment