வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உணவு தவிர்ப்புப் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று நடைபெற்று வருகின்றது.
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனை முன்பாக இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இங்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் தொடர்ச்சியாக 24 மணிநேரமும் சேவையில் ஈடுபட வேண்டும்.
ஆனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் வேறு மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
அவர்கள் எமது மருத்துவமனையில் சேவையாற்ற வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து மருத்துவமனை முன்பாக அப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நேற்று ஆரம்பித்தனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்த நிலையில் இன்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
0 comments:
Post a Comment