மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அங்கு வந்த மாற்று மத மக்கள் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர்.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் நேற்று ஈடுபட்டிருக்கும்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று சிவராத்திரி நடைப்பெறும் வேளை இச் சம்பவம் இடம் பெற்றது கண்டிக்கத்தக்கவிடம் என்று பலதரப்பினரும் கருத்து தெரிவித்துவரும் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக சம்மந்தபட்டவர்கள் தெரிவித்ததாவது:
மன்னார் மாந்தை பகுதியில் ஆலய இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் இருக்கும்போது சட்டபூர்வமற்ற செயல்பாட்டில் இறங்குவது கண்டிக்கப்பட வேண்டியது என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மாந்தைப் பகுதியில் ஆலயக் காணி, குளம் போன்ற வழக்கு கொழும்பு மேல் முறையீடு நீதிமன்றில் வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கும் போது ஒரு சில இந்து மதத்தலைவர்கள் தங்கள் சுய இலாபத்துக்காக இந்து மக்களை தூண்டிவிட்டு மன்னாரில் இந்து கத்தோலிக்க மக்களின் ஒற்றுமையை சீர்குழைத்து வருவதாக மன்னார் மறைமாவட்டம் கத்தோலிக்க ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழக்கு நிலுவையில் இருக்க சிவராத்திரி தினத்தை சாட்டாக வைத்து மன்னார் மாந்தை ஆலயத்துக்கு முன்பாக மாந்தைப் பகுதியில் புதிதாக நிலையான வளைவு ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கையை இந்து சமய நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இவ் வழக்கில் இருக்கும் ஒரு முக்கியஸ்தர் இவ் இடத்தில் வளைவை அமைக்க பின்னனியில் இருந்ததாக கூறுகின்றார்கள். நிலுவையிலிருக்கும் இவ் இடம் சம்பந்தமான வழக்கு தீர்ப்பு வரும் வரைக்கும் இரு பகுதினரும் பொறுமையாக இருந்து செயல்படாமல் ஒரு சமூகத்தினரை தூண்டிவிட்டு சட்டபூர்வமற்ற முறையில் செயல்பட்டதாலேயே இரு சமூகத்தின் மத்தியில் தற்பொழுது முறுகல் நிலை தோன்றியுள்ளது. ஆகவே எவராக இருந்தாலும் உரியவர்களிடம் சரியான விபரங்களை கேட்டறிந்து அவற்றை வெளியிடுவது சிறந்ததாகும்.
முழு முதற்கடவுள் சிவபெருமானின் மேன்மையான சிவராத்திரி விரதம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மேற்படி சம்பவம் எமக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றமையால் எம்மால் தொடர்ந்தும் சர்வமத பேரவையில் இருந்து செயல்பட விருப்பமில்லாத காரணத்தால் மன்னார் சர்வமத பேரவையிலிருந்து இந்துக் குருமார்கள் வெளியேறிக் கொள்ளுகின்றோம் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் பற்றி மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட போதும் ஒருவர் கூட சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லவில்லை எனவும் இருசாரர்ருக்கும் இடையில் மோதல் நடப்பதற்கு சற்று நேரத்தின் முன் ஒருபாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்தில் நின்று சென்றதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள். அதே நேரத்தில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் சம்பவம் நடந்து முடிந்த பின்னரே பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர் ஆனாலும் எவரையும் கைது செய்யவில்லை.
குறித்த சம்பவ இடத்திற்கு பொலிஸ் அதிகாரி சென்று இந்த பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது இதில் வளைவுகள் அமைப்பது சட்டப்படி குற்றம் என்றும் இந்த வளைவுகளை பிடுங்கி எறிந்தவர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.
இது சம்பந்தமாக கத்தோலிக்க மக்கள் கருத்து தெரிவிக்கையில் இந்த பாதை நீதிமன்ற வழக்கில் உள்ளதாகவும் கொங்ரீட் போடபட்டது தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்கள்.
இந்த பாதைக்கு வழக்குகள் இல்லை எனவும்இந்த வீதியில் வளைவு அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரா சபையின் அனுமதிக்கடிதம் உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இவ்விடயம் சம்மந்தமாக இந்துசமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில்;
திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் உடைக்கப்பட்ட தற்காலிக வளைவு தூக்கி நிறுத்தப்படடு மத வன்முறையில் ஈடுபட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்கவும் முரண்பட்ட இரு மதத்துகிடையில் ஒரு சந்திப்பை மேற்கொண்டு இதை சுமுகமாக தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும என்று நாடாளமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறியிருந்தார்.
இச் சம்பவத்தில் கவலைக்கு உரிய விடயம் என்ன எனில் அங்கு நின்ற பங்கு தந்தையர்களும் இவ்வாறான சமயங்களில் நடு நிலமையாக செயற்படாமல் ஒரு சார்பானவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டமையாகும். நல்லிணக்கம் , சகவாழ்வு, சமாதானம் இந்த மூன்று சொற்பிரயோகங்களும் நாடு சுதந்திரமடைந்த நாள் தொட்டு இன்று வரை இந்த முயற்சியில்; தொடர்ந்து தோல்விகளையே; சந்தித்து வருகின்றது. இதனை வெற்றிகொள்வதில் காணப்படும் பகைப்புலன்களை சரியான முறையில் கண்டறிவதில் பின்னடைவையே காணக் கூடியதாக உள்ளது. எந்தவொரு தரப்பும் இதனை தனித்து நின்று சாதிக்க முடியாது. எனவே தேசிய மற்றும் மத ஒற்றுமைக்காக கூட்டு அமைப்பாக சகல தரப்பும் ஒன்றிணைவதன் மூலம் தான் இந்தப் பயணத்தில் சரியான திசையை நோக்கி முன்னகரக் கூடியதாக இருக்கும்.
இனக்கலவரத்தால் நம் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவையும் அழிவையும் சந்தித்துள்ள நிலையில் மதக்கலவரத்தை உண்டுபண்னாமல் நல்லிணக்கத்தை உண்டுபண்ணுவதே மதத்தலைவர்களின் பொறுப்பாகும். திருக்கேதீஸ்வர ஆலய நுழைவாயில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவினை மீண்டும் தற்காலிகமாக அமைத்து எதிர் வரும் நான்கு நாட்களுக்கு வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தின் முன்பாக அமைக்கப்படவிருந்த திருக்கேதிஸ்வரம் ஆலய நிர்வாகத்தின் நிரந்தர அலங்கார வளைவு தொடர்பாகவும், இதனோடு மன்னார் மறைமாவட்ட குருக்களை இணைத்து உண்மைக்குப் புறப்பான், மத உணர்வுகளைப் புண்படுத்தும் செய்திகள பரப்பபட்டு வருவதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கத்தோலிக்கத்திருச்சபை பல நெடுங்காலமாக அமைதி வழித் தீர்வையே விரும்பி வருகின்றது. கத்தோலிக்கத் திருச்சபை ஒருபோதும் சமயநல்லிணக்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதையும் இப்புனித சிவராத்திரையை அனுஸ்டிக்கும் சகல இந்துக்களுக்கும் எதுவித இடையுறும் ஏற்படாவண்ணம் நடந்து கொள்ளுமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம். என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#ChristianAssociation #WelcomeArc #Thiruketheeswaram #MannarNews #Shivaratri #Hindus #Christians #Church #SivanTemple #Madu #TamilNewsKing
0 comments:
Post a Comment