பணிக்குத் திரும்பிய அபிநந்தன்

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை குண்டுகளை வீசியது.

இதன்போது, இந்திய விமானி அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தான் இராணுவப் பகுதிக்குள் விழுந்தது.

இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட அபிநந்தன் பின்னர் விடுவிக்கப்பட்டார். 

இந்தியா திரும்பிய அவருக்கு உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நான்கு வார விடுப்பில் இருந்த அபிநந்தன் நேற்று பணியில் சேர்ந்தார் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment