தென்னிந்திய நடிகர் சங்கச் செயலரும், நடிகருமான விஷாலுக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மகள் அனிஷாவுக்கும் திருமணம் நடத்த பெரியோர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனை விஷால் முறைப்படி அறிவித்துள்ளார்.
விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் நாளை (மார்ச் 16) ஐதராபத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடக்கிறது.
இரு குடும்பத்தினர் மற்றும் விஷாலின் நெருக்கமான நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.
இதனால் நிச்சயதார்தம் பற்றி எந்த தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை. திருமண நிச்சயதார்த்தம் நடந்தாலும் திருமண திகதி முடிவு செய்யப்படாது என்றே தோன்றுகிறது.
காரணம் விஷால் நடிகர் சங்க கட்டடத்தில்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அறிவித்திருக்கிறார்.
கட்டடப் பணிகள் எப்போது முடிவும் என்று உறுதியாக தெரியாததால் திருமண திகதி முடிவாகாது.
0 comments:
Post a Comment