இரத்தக் கறையுடன் சடலம் மீட்பு


தென்னந் தோட்டமொன்றிலிருந்து   சடலமொன்று நேற்று மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

 புத்தளம் முந்தல், அம்பலவெளி சாந்த மைக்கல்வத்த பகுதி தோட்டத்திலேயே சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மஹகும்புக்கடவல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க சிறில் ஜயராஜபூர ( வயது 69) என்பவரே சடலமாக மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலைச் சுற்றி இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டதுடன், இரத்தக் கறைகளும் காணப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழப்புத்  தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 சடலம் கண்டெடுக்கப்பட்ட குறித்த தோட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment