யானையின் தாக்குதல் ஒருவர் பலி, வாகனம் சேதம்!!!

சாலையில் பயணித்த வாகனம்மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.


இந்தச் சம்பவம் புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதி 17 ஆம் கட்டை புத்தி தசுன்கம பகுதியில் இன்று அதிகாலை நடந்துள்ளது.

புத்தளம், மணல்குன்று பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீட் பௌசுல் ஹக் (வயது 39) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார் என கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். 

புத்தளத்தில் இருந்து அதிகாலை 3 மணி அளவில் தம்புள்ள பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த வாகனம் மீது, வீதியில் தரித்து நின்ற காட்டு யானை ஒன்று தாக்குதல் நடத்தியதில் இவ்விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment