கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி விவகாரத்தால் இதுவரையிலும் சிபிசிஐடி பொலிஸாருக்கு 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத்ட தெரிவிக்கப்படுகிறது.
பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படமெடுத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முக்கிய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஆங்காங்கே கல்லூரி மாணவ- மாணவிகளின் போராட்டமும் வெடித்துள்ளது.
தற்போது சிபிசிஐடி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பில் 94884- 42993 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யலாம் என அறிவித்துள்ள பொலிஸார், பெயர்கள் மற்றும் பிற விபரங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளர்.
இந்த நிலையில் இதுவரையிலும் சுமார் 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் அளித்துள்ள தகவல்களால் வழக்கில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கி புதிய அரசாணையை வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment