கேரளாவில் சண்டையை விலக்கிவிட சென்ற இளைஞர் ஒருவர் 3 மணி நேர சித்ரவதைக்கு பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனந்து கிரிஷ் என்கிற 21 வயது இளைஞர் மார்ச் 12-ம் திகதி, கடை ஒன்றில் ஜூஸ் குடித்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல், அனந்துவை அவரது பைக்கில் வைத்தே கடத்தி சென்றது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நண்பர்கள் வேகமாக அனந்துவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை கேட்டு பதறிப்போன அனந்துவின் பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அனந்துவை தேடும் வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.
மார்ச் 13-ம் திகதி கரமானா என்னும் இடம் அருகே அனந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த சம்பமானது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொஞ்சிரவிலா பகுதியைச் சேர்ந்த விஷ்ணு ராஜ், வினீஷ் ராஜ் மற்றும் விஜய ராஜ் ஆகிய மூன்று சகோதரர்களை பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
#BrutalMurder #keralaNews #AnanthuKrish #Murder #CrimeNews #KeralaMurder #KaramanaPolice #Policeenquiry #CrimeInvestigation #KGF #TamilNewsKing
0 comments:
Post a Comment