யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக இருபதுக்கு இருபது (T20) கடின பந்து (லெத போல்) துடுப்பாட்ட போட்டி மின்னொளியில் நடத்தப்படவுள்ளது.
யாழில்.உள்ள கழகங்களில் அழைக்கப்பட்ட எட்டு கழகங்களுக்கு இடையில் குறித்த போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
விஜயரட்ணம் என்பவரின் ஞாபகார்த்தமாக இப் போட்டிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
போட்டிகள் யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
தினமும் மாலை 5.30 மணிக்கு ஒரு போட்டியும் இரவு 8.30 மணிக்கு மற்றைய போட்டியும் என இரு போட்டிகள் நடத்தப்டவுள்ளது.
குறித்த போட்டியில் சென்ரல் விளையாட்டு கழகம் , கே.சி.சி.சி. விளையாட்டு கழகம் , பற்றிசியன்ஸ் விளையாட்டு கழகம் , ஜொலிஸ்டார் விளையாட்டு கழகம் , திருநெல்வேலி மத்திய விளையாட்டு கழகம், சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம், AB விளையாட்டு கழகம் மற்றும் கிறாஸ்கோப்பர் விளையாட்டு கழகம் என்பன மோதவுள்ளன.
இன்றைய சுற்றுப் போட்டியில் AB விளையாட்டு கழகமும் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகமும் மோதவுள்ளன.
0 comments:
Post a Comment