மன்னார் மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டுவந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீள் அறிவித்தல் வழங்கும் வரை அகழ்வுப் பணியை இடைநிறுத்துமாறு, மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.
குறித்த புதை குழியிலிருந்து, அகழ்வின் மூலம் பெறப்பட்ட மனித எச்சங்களின் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை, மன்னார் நீதிமன்றம் நேற்று (07) அறிவித்ததையடுத்தே, அகழ்வுப் பணியாளர்களுக்கு, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment