ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அரசு உரிய பதிலை வழங்கத் தவறியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச.
காலி யக்கலமுல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தாய் நாட்டைப் பாதுகாப்பதற்காக போராடிய பாதுகாப்பு தரப்பினரை காட்டிக் கொடுக்க அரசு தயாராகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தொடர்பில் பல்வேறுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கபபட்டன.
எனினும் அதற்கு உரிய பதிலை வழங்க அரசு தவறியுள்ளது.
நாடு ஒன்றுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க சம்பந்தப்பட்ட நாட்டுக்கு அதிகாரம் உள்ளது - என்றார்.
0 comments:
Post a Comment