இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமாதானத்துக்கான விருப்பத்தில், நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானிடம் உள்ள இந்திய விமானி நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார் என்று இம்ரான்கான் நேற்று அறிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய விமானி அபிநந்தன் இன்று மாலை 4 மணிக்கு வாகா எல்லைக்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே அவரை விடுதலை செய்யக்கூடாது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் நேற்று முன்தினம் இந்திய விமானி பாகிஸ்தான் வான் எல்லையைத் தாண்டி குண்டு வீசுவதற்காக வந்துள்ளார்.
இதன்போது பாகிஸ்தான் இராணுவத்தால் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன்போதே குறித்த விமானி கைது செய்யப்பட்டார்.
பாகிஸ்தானுக்கு எதிராக குற்றம் புரிந்துள்ளார். அவர் இங்கு விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் கேட்டுள்ளது.
இஸ்லாமாபாத் நீதிமன்றமும் விசாரணைக்கு மனுவை ஏற்றுக்கொண்டது என செய்திகள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment