சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னப்பாடு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே வடமேற்கு கடற்படையினரால் நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 28 கிலோ கிராம் மீன்களும், மீன்பிடி படகுகள் நான்கும் , மீன்பிடித்தலுக்காக பயன்படுத்திய இயந்திரங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டன.
சின்னப்பாடு, மதுரன்குலி மற்றும் பள்ளிவாசல்பாடுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 19 , 34 , 35 , 37 , 43 மற்றும் 65 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
0 comments:
Post a Comment