லிந்துலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வந்த ஒருவர் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி உட்சென்று விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆண் நோயாளி ஒருவரை க் கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலைத் தரப்பினர் லிந்துலை பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து நோயாளியை தாக்கிய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment