இயக்குனர் அருண் குமார், மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் படம் சிந்துபாத்.
இது ஆக்க்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார்.
இதில், திருடனாக வலம் வரும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி படம் முழுவதும் வரும் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார்.
விஜய் சேதுபதியும், சூர்யா விஜய் சேதுபதியும் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். சேதுபதி திரைப்படத்தில் நடித்த லிங்கா, இப் படத்தில் தாய்லாந்தை சேர்ந்த வில்லனாக நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு துபாயில் நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment