தேவாலயத்தின் கூரையில் கூடு கட்டி வாழும் பறவைகளின் காதலுக்காக மணி ஒலிப்பதை காலவரையரையின்றி நிறுத்தியுள்ளது சுவிஸ்.
சுவிட்சர்லாந்தின் Basel-Landschaft பகுதியில் அமைந்துள்ளது Aesch நகரம்.
பறவைகள் வருவதை நல்ல நிகழ்வாக அங்குள்ளவர்கள் கருதுவதால், 18,000 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவில் 2013 ஆம் ஆண்டு பறவைகளுக்கான கூடு ஒன்று கட்டப்பட்டது.
அழகானதொரு கூடு அமைக்கப்பட்டு, அங்கு வரும் பறவைகள் தேவாலயத்தின் கூரையில் வந்து தங்குவதற்காக ஒரு சிறப்புக் கதவும் அமைக்கப்பட்டது.
இவ்வளவு செலவு செய்த பின்னரும்கூட, ஐந்து ஆண்டுகளாக அந்த கூட்டுக்கு பறவைகள் எதுவும் வரவில்லை.
2016 ஆம் ஆண்டு, பறவைகள், இனப்பெருக்கத்துக்காக இணை சேரும் காலமாகிய பெப்ரவரி மார்ச் மாதத்தில், தேவாலய மணி ஒலிப்பதை நிறுத்த தேவாலயம் முடிவு செய்தது.
மீண்டும் அந்த தேவாலயத்துக்குப், பறவைகள் வரத்தொடங்கி விட்டன.
இதனால் அவைகளைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக காலவரையரையின்றி தேவாலய மணி ஒலிப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு கோடையிலும் சுவிட்சர்லாந்துக்கு நாரைகள் வருவது வழக்கம்.
தெற்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் குளிர் காலத்தை முடித்த பின்பு, நாரைகள் இளவேனிற்காலத்தின் துவக்கத்தில் சுவிட்சர்லாந்துக்குத் திரும்புகின்றன.
0 comments:
Post a Comment