தமிழகத்தில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள பழமையான 6 மரபுச் சின்னங்களை ‘க்யூஆர்' கோட் உதவியுடன் முப்பரிமாணக் காட்சிகளாக 360 டிகிரி கோணத் தில் செல்போனில் பார்த்து ரசிக் கலாம்.
தமிழகத்தில் சேரர், சோழர், பாண்டியர் காலத்தில் ஏராளமான கோயில்கள், கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன. அதன்பிறகு ஆட்சி செய்த ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றில் பழமையான கட்டிடங் கள், கோயில்களை அவற்றின் பழமை மாறாமல் தமிழக தொல்லி யல் துறை பராமரித்து வருகிறது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருப்பாலத்துறை நெற்களஞ்சியம், திருச்சென்னம்பூண்டி சடைமுடி நாதர் கோயில், மனோரா, மானம் பாடி நாகநாத சுவாமி கோயில், தஞ்சாவூர் அரண்மனை வளாகத் தில் உள்ள மணி கோபுரம், ஆயுத கோபுரம், தர்பார் ஹால், ஷார்ஜா மாடி ஆகிய 8 மரபுச் சின்னங் களையும், தமிழகம் முழுவதும் 91 மரபுச் சின்னங்களையும் தொல்லி யல் துறை பராமரித்து வருகிறது.
இதில் முதல் கட்டமாக 6 மரபுச் சின்னங்களை 360 டிகிரி கோணத்தில் ‘க்யூஆர்' கோட் உதவி யுடன் செல்போனில் பார்த்து ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதன்படி, அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள இரட்டைக் கோயில், திருச்சி மாவட்டம் திருவெள்ளறையில் உள்ள ஸ்வஸ்திக் வடிவிலான கிணறு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை, காஞ்சிபுரத்தில் உள்ள கங்கைகொண்ட சோளீஸ்வரர் கோயில், ராமநாதபுரத்தில் உள்ள ராமலிங்க விலாச அரண்மனை, விழுப்புரம் மாவட்டம் செத்த வரையில் உள்ள பாறை ஓவியம் ஆகிய 6 இடங்களையும் செல் போனில் பார்த்து ரசிக்கலாம்.
இதுகுறித்து தஞ்சாவூர் தொல் லியல் துறை அலுவலர் த.தங்க துரை கூறியதாவது:
அறிவிப்புப் பலகை
தமிழகத்தில் உள்ள பழமையான மரபுச் சின்னங்களை தற்போதுள்ள நவீன வசதிகளின் உதவியுடன் கண்டுகளிக்கும் வகையில் முப்பரிமாண காட்சிகளாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதில் முதற்கட்டமாக 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை தொடர்பான காட்சிகள் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், தமிழக மரபுச் சின்னங்கள் உள்ள இடங்களிலும் இது குறித்த அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டுள்ளது.
அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள ‘க்யூ ஆர்' கோடை தங்களது செல்போன் வாயி லாக ஸ்கேன் செய்தால், அந்த மரபுச் சின்னங்களை 360 டிகிரி கோணத் தில் பார்த்து ரசிக்க முடியும். விரைவில் தமிழகத்தில் உள்ள இதர மரபுச் சின்னங்களையும் இவ்வாறு பார்வையிடுவதற்கு தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
0 comments:
Post a Comment