ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அம்மையாரை நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற ஒரு பக்க நிகழ்வொன்றின்போது இந்தச் சந்திப்பு நடந்தது. இது குறித்து சுமந்திரன் தெரிவிக்கையில்,
"ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் இலங்கை விடயமாக நேற்று செவ்வாய்க்கிழமை உரையாடினேன். அவரது அறிக்கைக்காக எமது மக்களின் நன்றிகளைத் தெரிவித்தேன்.
இன்று புதன்கிழமை அந்த அறிக்கையைத் தான் சமர்ப்பிப்பார் என்று அவர் கூறினார்.
இன்றைய அமர்வில் இலங்கை விவகாரம் பேசப்படும். அதன் பின்னர் நாளை பிரேரணை நிறைவேற்றப்படும் - என்றார்.
0 comments:
Post a Comment