யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
சுன்னாகத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த முதியவர் மரக்கறிகளை வாங்கிக்கொண்டு உடுவில் மானிப்பாய் வீதி வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றை முதியவர் முந்திச் செல்ல முற்பட்ட போது ,பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதியதிலேயே விபத்து ஏற்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என வைத்திய வட்டாரம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment