குடும்பத் தகராறில் சிசுவை தரையில் அடித்த தந்தையொருவரை பிரதேசவாசிகள் பொலிஸாரிடத்தில் ஒப்படைத்துள்ளனர்.
நொச்சியாகம - கடுபத்வெவ - கபரகொயா வெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சந்தேகநபரான கணவர் மனைவியை தடியினால் தாக்கியுள்ளார்.
இதன்போது மனைவியின் கையில் இருந்த குழந்தையும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் குழந்தையை தரையில் அடித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த குழந்தை நொச்சியாகம ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய குறித்த சந்தேகநபர் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளார்.
0 comments:
Post a Comment