நடிகர் டி.ராஜேந்தர், இளைய மகன் குறளரசன். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்தவர்,
இசையமைப்பாளராக 'இது நம்ம ஆளு' படத்தின் மூலம் அறிமுகமான குறளரசன் அதற்குப் பின் வேறு எந்தப் படத்திற்கும் இசையமைக்கவில்லை.
சிம்புவின் தம்பி என்பதால் அவர் மீதும் பிரபல வெளிச்சம் பாய்ந்தது. சமீபத்தில் அவர் முஸ்லிம் மதத்திற்கு மாறியது ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு முஸ்லிம் பெண்ணை அவர் காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளதால்தான் மதம் மாறினார் என்ற தகவல் வெளியானது.
எம்மதமும் தனக்கு சம்மதம் எனக் கூறி அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டிஆர்.
இதனிடையே, குறளரசன் திருமணம் அடுத்த மாதம் ஏப்ரல் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவாராம் டிஆர் .
அண்ணன் சிம்பு திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே தம்பி குறளரசன் திருமணம் நடைபெறவுள்ளது.
0 comments:
Post a Comment