ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள், முழுமையாகவும், தெளிவான காலவரம்புக்கு உட்பட்ட வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கைகளுக்கு இலங்கை முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் கோரியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி இதனை வலியுறுத்தினார்.
எமது பார்வையில் 30/1 தீர்மானம், நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை அடைவதற்கு முக்கியமான விடயங்களை உள்ளடக்கியிருக்கின்றது.
சகல தரப்புகளினதும் ஒருங்கிணைந்த முயற்சியாக அதனை அடைய முடியும். இந்த இலக்கை அடைவதற்கு, இலங்கை அரசுக்குத் தொடர்ந்து ஆதரவும் ஊக்கமும் அளிப்போம் - என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment