எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்!


பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீதான இந்திய விமான படைத் தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள ஜெ.இ எம் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்தத் தாக்குதல் உண்மையில்லை என்று பல சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளதால்,  தாக்குதலுக்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பாஜகவின் 'சங்கல்ப் பேரணி' ஞாயிறன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:
தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டும் பணியில் நமது வீரர்கள் பரபரப்பாக செயல்பட்டுக்கு கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சிகளோ நமது வீரர்களின் வீரத்துக்கும், துணிச்சலுக்கும் ஆதாரங்களைக் கேட்கின்றன.
நமது விமானப்படையினர் நடத்திய தாக்குதல் குறித்து ஆதாரங்களை எதிர்க்கட்சிகள் கேட்பது, பாகிஸ்தானை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்தும்.
தேசம் ஒற்றுமையாக ஒரே குரலில் பேசும்போது, 21 எதிர்க்கட்சிகள் மட்டும் தில்லியில்  கூடி, எங்களைக் கண்டித்தார்கள்.
நான் தீவிரவாதத்தை ஒழித்துக்கட்ட முயலும்போது, எதிர்க்கட்சிகள் என்னை ஒழிக்க சதி செய்கிறார்கள்.
எல்லையில் நமது வீரர்கள் போராடிவரும் நிலையில் இங்கு உள்நாட்டில் சிலர் பாகிஸ்தானிடம் கனிவுடன் கோரிக்கை வைக்கிறார்கள். இது  புதிய இந்தியா. நமது வீரர்களைப் பலிகொடுத்துவிட்டு வேடிக்கை  பார்க்க மாட்டோம்.
பிகார் மாநிலத்தில் ஆளும் அரசானது மக்களுக்குத் தேவையான பல திட்டங்களைச் செய்து வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment