பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட விவகாரத்தில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஏ.கே.சூரியபிராகசம் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே இது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் முறையிட்டிருந்தும் சரியான நடவடிக்கை எடுக்காததனால் நீதிமன்றம் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, சபரிராஜன்,சதிஸ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் காவலில் வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அத்துடன் இதுதொடர்பாக திருநாவுக்கரசு கூறிய தகவல்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவி பெயரை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் , உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
#PollachiAbuse #IndianPolice #SPPandiarajan #Arrest #CrimeNews #PollachiUpdates #PollachiCrime #SexualHarassment #TamilNewsKing
0 comments:
Post a Comment