பாலிவுட் சினிமா அனுராக் கஷ்யப் மிகப் பெரிய இயக்குனர். தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
இவர் இயக்கிய ஹிந்தி படங்களில் சில முக்கிய வேடங்களில் நடித்திருந்தவர் சவி சிது. இவர் இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் பாதுகாப்பு வேலை செய்து வருகிறார்.
ஒரு பேட்டியில், கடந்த சில வருடங்களாக படு கஷ்டத்தில் இருந்து வருகிறேன், எனது உடல்நிலையும் சரியில்லை. கடந்த வருடம் என் மனைவியும் இறந்துவிட்டாள். அது எனக்கு மிகவும் வேதனையையும் தனிமையும் தத்துவிட்டது. சில படங்களில் நடித்த நான் இப்போது பட டிக்கெட் வாங்கவே கஷ்டப்படுகிறேன். பணம் சேர்த்து வைத்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கண்டிப்பாக சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
#CineNews #Bollywood #AnuragKashyap #Actor #CurrectSituation #SaviSithu #SaviSidhu #HindiActor #TamilNewsKing
0 comments:
Post a Comment