பொப் இசை பாடகன் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய Leaving Neverland என்ற ஆவணப்படத்தில் சிறு வயதுக் குழந்தைகளை மைக்கேல் ஜாக்சன் தவறாக பயன்படுத்தியாகக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு மைக்கேல் ஜாக்சனின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், மேலும் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன், இந்த ஆவணப்படத்தால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இவர் கை மணிக்கட்டு நரம்பை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவசர ஊர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது பொய்யான தகவல் என பாரிஸ் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment