டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டதில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் கைதடி – மானிப்பாய் சாலையில் உரும்பிராயில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த முச்சக்கரவண்டிச் சாரதி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டிச் சாரதி சாவகச்சேரி மட்டுவிலைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment