தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது, ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி, 113 ஓட்டங்களால் தோல்விடைந்தது.
தென்னாபிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இ ப் போட்டி இடம்பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் 251 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பில், க்யின்டன் டி கொக் 94 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில், திசர பெரேரா 26 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை அதிகபட்சமாக கைப்பற்றினார்.
252 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 32.2 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் ஓஷத பெர்னாண்டோ அதிகபட்சமாக 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
தென்னாபிரிக்க அணி சார்பில் ரபாடா 43 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினார்.
இந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரில் தென்னாபிரிக்க அணி, 2க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.
0 comments:
Post a Comment