பொருளாதார பிரச்சினை காரணமாக சில காலம் நின்றிருந்த மடை திறந்து படம் இப்போது மீண்டும் பணியை ஆரம்பித்திருக்கிறது.
கழுகு, சவாலே சமாளி, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா, தற்போது இயக்கி வரும் படம் மடை திறந்து.
ராணா ஹீரோ, ரெஜினா ஹீரோயின். இவர்கள் தவிர சத்யராஜ், நாசர், ஆர்.ஜே.பாலாஜி, கே.கே.மேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, சத்யா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்புகள், விரைவில் தொடங்கவிருக்கிறது.
தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சினை காரணமாகவே படம் சில காலம் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த இடைவெளியில் இயக்குனர் சத்யசிவா கழுகு 2 படத்தை முடித்து விட்டார். அதுவும் விரைவில் திரைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment