மட்டக்களப்பு முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமை அகற்றி பாடசாலை கட்டடத்தை விடுவித்து தருமாறும் கோரி பிரதேச மக்கள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் இராணுவ முகாமுக்கு முன்பாக கூடிய பொதுமக்கள் தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்திய வாறு கோசமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முறக்கொட்டான் சேனை மற்றும் தேவபுரம் கிராம சமூக அமைப்புக்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன்,கு.குணசேகரம்,சு.சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவின்போது ஜனாதிபதிக்கும் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கை அடங்கிய மனு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரனிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.
விரைவாக பாடசாலை கட்டடத்தை விடுவிப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் தேவபுரம்,களுவன்கேணி கிராமங்களுக்கான பிரதான வீதியையும் திறந்துதர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
எதிர்வரும் 11.03.2019 ஆம் திகதி ஜானதிபதியை சந்தித்து இதற்கான தீர்வு பெற்று தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment