யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீடு ஒன்று இன்றையதினம் பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.
தொல்புரம், மூட்டடியில் புற்றுநோயால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபா நிதியில் இந்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஓமானில் புலம்பெயர்ந்துள்ள தம்பதியின் நிதியுதவியில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி தர்ஷன ஹெட்டியராச்சி மற்றும் நன்கொடையாளரான ஓமானைச் சேர்ந்த மோகன் சங்கர் தம்பதி இணைந்து வீட்டைப் பயனாளியிடம் கையளித்தனர்.
நன்கொடையாளர்களால் வீட்டுக்குத் தேவையான உபகரணங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment