விடுதலைப்புலிகளால் தங்கம் புதைத்து வைத்ததாக நம்பப்படும் அறை ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தோண்டும் நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முதன்மை வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் போது முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் தங்க நகைகள் புதைத்து வைத்ததாக தகவல்கள் கிடைத்ததனையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் முல்லைத்தீவு பொலிஸ், சிறப்பு அதிரடிப்படையினர், தொல்பொருள் திணைக்களத்தினர், மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் ஆகியோர் சென்று வீட்டின் அறை ஒன்றில் தோண்டியுள்ளனர்.
எனினும் குறித்த வீட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தின் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் தடயங்களே மீட்டுள்ளதாகவும் அங்கு தங்க ஆபரணங்கள் எவையும் மீட்கப்படவில்லை. இதன் போது 2011 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட நாணயக்குற்றி ஒன்று காணப்பட்டுள்ளதனையடுத்து குறித்த பகுதி ஏற்கனவே தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தோண்டும் நடவடிக்கையை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment