யாழ்ப்பாணம், அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட்ட கொண்டாட்ட விழாவை முன்னிட்டு நடத்திய கபடித் தொடரில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்றலில் மின் ஒளியில் இறுதியாட்டம் நேற்று இடம் பெற்றது.
இதில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து, முல்லைத்தீவு உதய தாரகை விளையாட்டுக் கழக அணி மோதியது.
முதற்பாதி ஆட்ட நேர முடிவில் 20 : 9 என்ற புள்ளி அடிப்படையில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணி முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் தமது ஆட்டத்தை வெளிப்படுத்திய வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணி 20 : 7 என்ற புள்ளிகளைப் பெற்றது.
ஆட்ட நேர முடிவில் வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணி 46 : 16 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன், மற்றும் ஆட்ட தொடர் நாயகன் விருதை வவுனியா ஈர பெரியகுளம் பீரகதீஸ் விளையாட்டுக் கழக அணி வீரன் எம்.எஸ்.எஸ். சாந்த றூபன் ஆசீர் பெற்றார்.
0 comments:
Post a Comment