முழுநிலா நாள் கலைவிழா வவுனியாவில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு வவுனியா தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட மூவினத்தையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
தெற்கு வலயகல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலர் எம்.ஹனீபா, சிங்கள பிரதேச செயலாளர் எஸ், ஜானக, உதவிக் கல்வி பணிப்பாளர் எஸ். சிவசிவா,மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜா, ஓய்வுநிலை உதவிக் கல்வி பணிப்பாளர் ஆ.இந்திரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment