இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
லசித் மலிக்க தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்கவுடாக இடம்பெற்று வரும் ஒருநாள் தொடரில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மலிங்க தலைமையின் கீழ் இலங்கை அணி இதுவரை தென்னாபிரிக்க அணியுடன் 07 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த ஏழு போட்டிகளிலுமே இலங்கை அணி தோல்வியைத்தான் சந்தித்துள்ளது.
இந்த நிலையிலேயே இலங்கை அணிக்கு எதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் புதிய தலைவரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி சொந்த மண்ணிலேயே தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment