முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்றைடர்டஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.
186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி சார்பில் பிரித்திவி 55 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 99 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.
இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக இடம்பெற்ற சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, ஒரு விக்கட்டை இழந்து 10 ஓட்டங்களைப் பெற்றது.
சுப்பர் ஓவரில் பதிலளித்தாடிய கொல்கத்தா நைட்றைடர்ஸ் அணி, ஒரு விக்கட்டை இழந்து 7 ஓட்டங்களை எடுத்துத் தோல்வியடைந்தது.
0 comments:
Post a Comment