தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
இது தொடர்பில்சர்வதேசம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். இலங்கை அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சர்வதேசத்தின் அழுத்தம் மேலும் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்
இலங்கை வந்துள்ள ஐநா சபையின் அரசியல் பிரிவின் முன்னாள் செயலர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பில் நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது,
காணாமல்போனோருக்கான பணியகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் உண்மை நல்லிணக்க அலுவலகம் போன்றவை உண்மையை நிலைநாட்டும் முகமாகத் தொடர்ச்சியாக மக்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிடைப்பது மாத்திரமல்லாது அரசும் ஏனைய மக்களும் தங்கள் நிலைமை குறித்துக் கரிசனையாக உள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளும் முகமாக அரசின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
தமிழ் மக்கள் தாம் எப்போதும் ஏமாற்றப்படுவதாகவே உணர்கின்றார்கள். அவர்கள் இனியும் ஏமாறத் தயாரில்லை. அவர்களுக்குச் சரியானதைச் செய்வது தொடர்பில் சிங்களத் தலைவர்கள் பின்வாங்குகிறார்கள்.
இது தொடர்பில் பன்னாட்டுச் சமூகம் கூடிய கரிசனை கொள்ள வேண்டும். மேலும் பிரிக்க முடியாத பிரிபடாத ஒருமித்த நாட்டுக்குள் நியாயமான ஓர் அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
தமிழ் மக்கள் தமது சொந்த வரலாற்றையும் பாரம்பரியங்களையும் கொண்ட தனித்துவமான மக்கள். எமது அடிப்படை உரிமைகளையே நாங்கள் கேட்கின்றோம். இன்று இந்த நாட்டில் எமது விருப்பத்துக்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம்’– என்றார்.
இலங்கை அரசு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வெளிநாடுகளின் அழுத்தம் மேலும் தேவை. இலங்கை அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாக இலங்கை தொடர்பான பிரச்சினையை பன்னாட்டு மட்டத்தில் எடுத்துச் செல்லுங்கள்’ என்று ஐ.நாவின் முன்னாள் அரசியல்துறை செயலர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனிடம் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார்.
0 comments:
Post a Comment