யாழில் விளம்பரங்களுக்குத் தடை

யாழ்ப்பாணம் நகரப் பகுதியின் பொது இடங்களில் விளம்பரங்கள் (போஸ்டர்கள்) ஒட்டுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அறிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு நிறுவனங்களாக இருந்தாலும் விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் சபை உறுப்பினர் வ.பார்த்தீபனால் சபையில் முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்கள், கல்வி நிறுவனங்கள் அவர்கள் சார்ந்த விளம்பரங்களை பொது மக்களுடைய மதில்கள், சுவர்கள், அரச திணைக்களங்களில் சுவர்களிலோ, பொது இடங்களின் சுவர்களிலோ ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை மீறிச் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment