முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனான்டோவுக்கு எதிரான நான்கு வழக்குகளும் எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டார்.
அமைச்சராக இருந்த போது, சொத்து விபரங்களை வெளியிடாமை தொடர்பிலேயே பெனான்டோவுக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் வழக்குத் தொடுக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி முதல் 2011 மார்ச் 31 ஆம் திகதி வரையில் தமது சொத்து விபரங்கள் குறித்து அவர் வெளியிடாமை தொடர்பிலேயே வழக்குகள் தொடரப்பட்டன.
முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெனான்டோவுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
அவற்றில் ஒரு வழக்கிலிருந்து அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டு கடந்த 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தார்.
0 comments:
Post a Comment