தாய்ப்பால் கொடுக்கும் போது திடீரென குழந்தை மீது தாய் விழுந்ததில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அயர்லாந்தில் நடந்துள்ளது.
மேரி டவுனி என்ற பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு டாரக் எனப் பெயர் வைக்கப்பட்டது.
டாரக் பிறந்த நான்காவது நாள் மருத்துவமனையில் இருந்தபடியே அவனுக்கு மேரி தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட, குழந்தையை கீழே போட்ட மேரி அவன் மீதே விழுந்துள்ளார். இதில் மேரி உயிரிழந்தார்.
அங்கு வந்த மருத்துவர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சையளித்தும் பயனில்லாமல் குழந்தையும் உயிரிழந்தது.
மேரி மற்றும் டாரக்கின் எதிர்பாராத உயிரிழப்பு அவர் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேரியின் கணவர் கிரோன் மற்றும் அவரின் இரண்டு மகன்கள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இந்த நிலையில், மேரியின் கையில் குழந்தை டாரக்கை வைத்திருக்கும் நிலையிலேயே இருவரையும் ஒன்றாக புதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment