சமூக வலைதளங்களில் நடிகை ரோகிணிக்கு எதிராக 'அட்டாக்' !!


சென்னை: சமூக வலைதளங்களில் நடிகை ரோகிணிக்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

நடிகை ரோகிணி சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், `எனக்கு மோடியிடம் கேட்க ஒன்றும் இல்லை.ஆனால், அவரிடம் சொல்வதற்கு ஒரு விஷயம் மட்டும் உள்ளது.ப்ளீஸ் தேர்தலில் போட்டியிடாதீர்கள்! காரணம் இனிமேலும் இப்படியொரு பாசிசமான ஆட்சி எங்கள் நாட்டுக்குத் தேவையில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, எதிராகப் பேசுபவர்களைக் கொலை செய்பவர்களை ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். 
இதற்கு எதிர்வினையாக பாஜகவினர் சமூக வலைதளத்தில் நடிகை ரோகிணியின் அலைபேசி எண்ணை பகிர்ந்து வசை பாடும்படி பரப்பி வருகின்றனர்.பாஜகவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment